கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீடு பயிற்சி
ராமநாதபுரம்: -தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தில் ஓர் அங்கமாக செயல்படும் ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்கள் குறித்த பயிற்சி நடக்கிறது.நகை மதிப்பீட்டு பயிற்சி வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 17 நாட்கள் நடை பெறும். இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ.4450. பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மார்ச் 24 முதல் ஏப்.,13 வரை பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும்.விண்ணப்ப கட்டணமாக ரூ.100 மற்றும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., யுடன் செலுத்த வேண்டும். இந்த பயிற்சிக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது வரம்பு 15 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.பயிற்சி வகுப்புகள் ஏப்.,15 ல் துவக்கப்படும். இந்த பயிற்சி பெறுவதால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர்களாக பணி பெற வாய்ப்பு கிடைக்கும். பயிற்சி தொடர்பான விவரங்களை 88254 11649, 95781 63661 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என ராமநாதபுரம் மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளார்.