உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாசிபட்டினம் தர்கா சந்தனக்கூடு விழா

பாசிபட்டினம் தர்கா சந்தனக்கூடு விழா

தொண்டி : தொண்டி அருகேபாசிபட்டினம் சர்தார் நெய்னா முகமது ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு விழா நடந்தது.தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சர்தார் நெய்னா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு உரூஸ் எனும் மத நல்லிணக்க விழா கொடியேற்றம் ஜூன் 30 ல் நடந்தது. அதனை தொடர்ந்து முதல் நாள் இரவு தலை பிறையும், ரத ஊர்வலமும், ஜூலை 9 ல் ஹத்தம், தமாம், சிறப்பு பயான், விருந்து உபசரிப்பும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு மாணவநகரி, ஸ்தானிகன்வயல் கிராமத்திலிருந்து புறப்பட்டது. எஸ்.பி.பட்டினம், மருங்கூர் வழியாக சென்று நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பாசிபட்டினம் தர்காவை மூன்று முறை வலம் வந்து தர்கா முன்பு நிறுத்தப்பட்டது.மத ஒற்றுமைக்குஎடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். ஜூலை 26ல் கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பாசிபட்டினம் விழாக் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ