உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயணிகள் வலியுறுத்தல் : ராமேஸ்வரத்தில் இருந்து துாத்துக்குடிக்கு ரயில்: சாயல்குடி வழியாக இயக்குவதற்கு கோரிக்கை

பயணிகள் வலியுறுத்தல் : ராமேஸ்வரத்தில் இருந்து துாத்துக்குடிக்கு ரயில்: சாயல்குடி வழியாக இயக்குவதற்கு கோரிக்கை

ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம், பரமக்குடி வழியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சென்று பின்னர் அங்கிருந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடி, திருச்செந்துார், திருநேல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு ரயில் சேவை உள்ளது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து துாத்துக்குடி செல்வதற்கு ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி வழியாக துாத்துக்குடி செல்வது குறைந்த துாரமாகும். அதாவது ராமநாதபுரத்திலிருந்து சாயல்குடி வழியாக துாத்துக்குடி செல்வதற்கு 122 கி.மீ., தான். அதுவே ராமநாதபுரம் - பரமக்குடி- அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடிக்குச் 220 கி.மீ செல்ல வேண்டும்.பரமக்குடி, மானாமதுரை, அருப்புகோட்டை வழியாக செல்லும் போது பயணிகளுக்கு 102 கி.மீ கூடுதல் தொலைவும், கூடுதல் நேரம், பணமும் விரயமாகிறது. இதனால் வியாபாரிகள், சுற்றுலாப்பயணிகள் சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக பலமுறை ரயில்வே நிர்வாகம், மத்திய அரசுக்கு வியாபாரிகள், பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.ராமநாதபுரம் சாயல்குடி வழியாக துாத்துக்குடி ரயில் சேவை துவங்கினால் திருப்புல்லாணி, ஏர்வாடி தர்ஹா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் சுற்றுலாப்பயணிகளும் பயனடைவார்கள்.எனவே விரைவில் ராமேஸ்வரம் - ராமநாதபுரம் - சாயல்குடி வழியாக துாத்துக்குடிக்கு ரயில் சேவை துவங்க மத்திய அரசு மற்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். அதற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என வியாபாரிகள், பயணிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை