உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ்கள் பெயரளவில் இயக்கம் காத்திருந்து பயணிகள் அவதி

பஸ்கள் பெயரளவில் இயக்கம் காத்திருந்து பயணிகள் அவதி

ராமநாதபுரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ளூர் பஸ்கள் பெயரளவில் இயக்கப்பட்டதால் ஊருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் குவிந்த பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்பட்டனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பண்டிகைகள், தொடர் விடுமுறை நாட்களில் கூடுதலாக மாவட்டந்தோறும் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறு இல்லாமல் வழக்கமான பஸ்களை சிறப்பு பஸ்களாக இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதன் காரணமாக வெளியூர் செல்பவர்கள், சொந்த ஊருக்கு வருபவர்கள் சிரமப்படுகின்றனர். நேற்று சொந்த ஊர் மற்றும் வெளியூர், சுற்றுலா தலங்களுக்குசெல்வதற்காக ஏராளமான பயணிகள் ராமநாதபுரத்தில் குவிந்தனர்.அதற்கு ஏற்றவாறு பஸ்கள் இயக்கப்படாததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பஸ் ஸ்டாண்டில் குடும்பத்துடன் வந்தவர்கள் குழந்தைகளுடன் காத்திருந்து சிரமப்பட்டனர்.பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப வெளியூர் மட்டுமின்றி உள்ளூர் பகுதிகளுக்கும் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை