மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
9 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
9 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
9 hour(s) ago
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கேண்டீன் வசதி இல்லாததால் உணவு கிடைக்காமல்பயணிகள் சிரமப்படுகின்றனர்.மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் ரயில் நிலையம் உள்ளது. இதன்வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது பாம்பன் ரயில்வே பாலப்பணிகள் நடப்பதால் பல ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. ராமநாதபுரத்தில் இருந்தும் சில ரயில்கள் இயக்கப்பட்டுகின்றன. இதன் காரணமாக ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. ரயில் நிலையத்தில் கேண்டீன் வசதி இல்லாத நிலையில் பயணிகள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்று உணவு வாங்குவதற்காக அலைய வேண்டியுள்ளது. பலர் ரயில் போய்விடுமோ என்ற அச்சத்தில் சாப்பிடாமல் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் மாதவன் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறைய கடைகள் இருந்தன. தற்போது வாடகை அதிகம் கேட்பதால் கேண்டீன் நடத்த யாரும் முன்வரல்லை. ரயில்வே நிர்வாகம் பயணிகள் நலன்கருதி கேண்டீன் வசதி செய்துதர வேண்டும் என்றார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago