மேலும் செய்திகள்
பஸ்சிற்குள் மழைநீர் பயணிகள் சிரமம்
13-Mar-2025
முதுகுளத்துார்,: சாயல்குடியில் இருந்து முதுகுளத்துாருக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பிரேக் டவுன் ஆனதால் பாதி வழியில் இறக்கவிடப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனர்.முதுகுளத்துாரில் இருந்து சாயல்குடிக்கு 9ம் எண் அரசு டவுன் பஸ் தினந்தோறும் இயக்கப்படுகிறது.நேற்று மாலை சாயல்குடியில் இருந்து முதுகுளத்துாருக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் முதுகுளத்துார் புறவழிச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பிரேக் டவுன் ஆனது. பயணிகள், மாணவர்கள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து மக்கள் அவ்வழியே வந்த டூவீலர் மற்றும் வாகனங்களை நிறுத்தி லிப்ட் கேட்டு சென்றனர். சிலர் 2 கி.மீ., நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டதால் அவதிப்பட்டனர். எனவே பணிமனையில் இருந்து பஸ் இயக்கப்படும் போது முழுமையாக பரிசோதனை செய்து இயக்க வேண்டும்.மேலும் பழுதான டவுன் பஸ்சைகளை பணிமனையில் ஒப்படைத்து விட்டு புதிய பஸ்கள் பெறுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
13-Mar-2025