உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை நோயாளிகள் அவதி

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை நோயாளிகள் அவதி

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயகாளிகள் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.திருப்புல்லாணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஒரு டாக்டர் மற்றும் நான்கு செவிலியர்கள் பணிபுரிகின்றனர்.திருப்புல்லாணி மட்டுமின்றி கிராமங்களைச் மக்கள் புறநோயாளிகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.திருப்புல்லாணி எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்ட முன்னாள் தலைவர் அப்துல் வகாப் கூறியதாவது: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்கள், வளரிளம் பெண்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகளுக்காக வருகின்றனர்.டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுவதால் சிரமத்தை சந்திக்கின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த நிலையில் இருந்த திருப்புல்லாணி பழைய அரசு துணை சுகாதார நிலையம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியின் காரணமாக இடித்து அகற்றப்பட்டது. அவ்விடத்தில் புதிய கட்டுமானப் பணிகள் இல்லாமல் உள்ளது.தற்பொழுது துணை சுகாதார நிலையம் எங்கு இயங்குகிறது என்ற விவரம் தெரியவில்லை. எனவே உத்திரகோசமங்கை வட்டார மருத்துவ அலுவலர் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை