உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெளியூர் செல்லும் சாயல்குடி நிலக்கடலை

வெளியூர் செல்லும் சாயல்குடி நிலக்கடலை

சாயல்குடி: சாயல்குடி அருகே கடுகுச்சந்தை, நரிப்பையூர், ஐந்து ஏக்கர், எஸ்.தரைக்குடி, செவல்பட்டி, கூராங்கோட்டையில் பெருவாரியாக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நல்ல மணற்பாங்கான இடங்களிலும், செம்மண் பாங்கான இடங்களிலும் நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது. பனை மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஊடுபயிராகவும் நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது. எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலைஇங்கு விளைவிக்கப்பட்டு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.தின்பண்டத்திற்கு தேவையான வகையில் நிலக்கடலையின் மூலமாக மசாலா கடலை, அவித்த கடலை, வறுத்த கடலை என பல்வேறு வகையில் சாயல்குடி கடலை என கூவி விற்கப்படுகிறது.அதிக பருமனும் சுவையும் கொண்ட கடலை மகத்துவம் அறிந்தவர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.தற்போது சாயல்குடியில் இருந்து ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையோரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டரை படி நிலக்கடலை ரூ.100க்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ