மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
4 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
4 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
4 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
4 hour(s) ago
ராமநாதபுரம்:தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஓய்வூதியம் பெற ஆண்டு தோறும் உயிர் வாழ் சான்று அவர்கள் பணிபுரிந்த இடங்களில் வழங்க வேண்டும். அத்துடன் ஆதார், பான்கார்டு நகல்கள், ஓய்வூதிய வங்கி கணக்கு விபரம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை வழங்க வேண்டும். இவற்றை மார்ச் 30க்குள் வழங்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கூடுதலாக போட்டோ கேட்டு அலைகக்ழிப்பதாக ஓய்வூதியர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சங்க மண்டல துணை செயலாளர் மணிக்கண்ணு கூறியதாவது: தமிழகத்தில் 96 ஆயிரம் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதை பெற புதியதாக ஓய்வூதியரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கேட்கின்றனர். ஓய்வூதியம் ஆணையில் தொழிலாளர்கள் மனைவியுடன் எடுத்த போட்டோ மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்தில் பாஸ்போர்ட் போட்டோ உள்ளது. இந்நிலையில் கூடுதலாக ஒரு பாஸ்போர்ட் போட்டோ கேட்பது தேவையற்றது. இது ஓய்வூதியர்களை அலைக்கழிக்க வைப்பதாகும் என்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago