நாய்கள் தொல்லையால் மக்கள் பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலியில் தெருநாய்கள் தொந்தரவால் மக்கள் சிரமப்படுகின்றனர். 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மைய பகுதியாக சனவேலி உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி, கடைவீதிகள், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வரு கின்றன. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகளும், பொதுமக்களும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நாய்கள் குறுக்கே வருவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி காயமடைந்துள்ளனர். அதிகாரிகள் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.