உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உயரழுத்த மின்கம்பி தாழ்வாக செல்வதால் மக்கள் அச்சப்படுகின்றனர். முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துார் துணைமின் நிலையத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட மின்கம்பகள் வழியாக மின்விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது உயரழுத்த மின்கம்பி தாழ்வாக செல்வதால் மக்கள் அச்சப்படுகின்றனர். மக்கள் கூறியதாவது: கீழச்சாக்குளம் கிராமத்தில் இருந்து கண்மாய்க்கரை அரசு பள்ளி வழியாக முதுகுளத்துார் செல்லும் ரோட்டில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் இவ்வழியே செல்லும் உயரழுத்த மின்கம்பி கையால் எட்டித் தொடும் உயரத்தில் செல்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் மக்கள் அச்சப்படுகின்றனர். இறுதிச்சடங்கிற்காக சடலத்தை துாக்கிச் செல்லும் போதும் இடையூறாக உள்ளது. விவசாய பயன்பாட்டிற்காக வாகனங்களை கொண்டு செல்ல முடியாமலும் மக்கள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் இருப்பதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ