உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூட்டுறவு வங்கி முன்புள்ள பள்ளத்தால் மக்கள் அச்சம்

கூட்டுறவு வங்கி முன்புள்ள பள்ளத்தால் மக்கள் அச்சம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் - கடலாடி ரோடு கூட்டுறவு நிலவள வங்கி முன்பு கழிவுநீர் கால்வாய் பள்ளம் ஆபத்தான நிலையில் இருப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.முதுகுளத்துார் - கடலாடி ரோட்டில் கூட்டுறவு நிலவள வங்கி செயல்படுகிறது. இங்கு முதுகுளத்துார், கடலாடி தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஏராளமானோர் தினந்தோறும் நகைக்கடன் வைப்பதற்கும், நகைகளை திருப்புவதற்கும் வந்து செல்கின்றனர்.முதுகுளத்துார் பேரூராட்சி சார்பில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்வதற்காக வங்கி முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. தற்போது முறையாக பராமரிக்கப்படாததால் வங்கி முன்பு ஆபத்தான நிலையில் உள்ள பள்ளத்தால் விவசாயிகள் அச்சப்படுகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள பள்ளத்தை மூடுவதற்காக கடந்த சில மாதத்திற்கு முன்பு குழாய் இறக்கி வைக்கப்பட்டு எந்த பணியும் நடைபெறாமல் உள்ளது. எனவே விரைவில் பள்ளத்தை மூடி சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை