உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழச்சாக்குளத்தில் 2 நாட்களாக மின்தடையால் மக்கள் அவதி

கீழச்சாக்குளத்தில் 2 நாட்களாக மின்தடையால் மக்கள் அவதி

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் இரண்டு நாட்களாக மின்தடையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.கீழச்சாக்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துார் துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக கீழச்சாக்குளம் கிராமத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவுநேரத்தில் துாங்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ