உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

ராமநாதபுரம்; அபிராமம் பேரூராட்சியுடன் நத்தம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 7 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.நத்தம் ஊராட்சியில் உள்ள 7 கிராம மக்கள் கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் அளித்த மனுவில், நத்தம்,முத்தாதிபுரம், அண்ணாநகர், கள்ளிக்குளம், மணிநகரம் உள்ளிட்ட 7 குக்கிராமங்கள் நத்தம் ஊராட்சியில் உள்ளன. ஆடு, மாடு, கோழி வளர்த்தல், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இந்நிலையில் நத்தம் ஊராட்சியை அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு இணைத்தால் நுாறு நாள் வேலை கிடைக்காது. இதை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. எனவே நத்தம் ஊராட்சியை அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்