காரங்காடு சுற்றுலா மையம் திறப்பு குறித்த சமாதான கூட்டத்தை புறக்கணித்த மக்கள் காரங்காடு சுற்றுலா மையம் திறப்பு: சமாதான கூட்டத்தை புறக்கணித்த மக்கள்
திருவாடானை : தொண்டி அருகே காரங்காடு சுற்றுலா மையத்தில் வனத்துறை யினருக்கும் கிராமத் தினருக்கும் பிரச்னையால் 17 நாட்களாக மூடப் பட்டுள்ளது. மீண்டும் திறப்பது தொடர்பான அதிகாரிகள் பங்கேற்ற சமாதான கூட்டத்தில் கிராம மக்கள் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. தொண்டி அருகே காரங்காட்டில் சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந் துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனை வருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக 2017ல் அறிவிக்கபட்டது. இதில் காரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வனத்துறையினருடன் சேர்ந்து செயல்படும் வகையில் தலைவர், செயலாளர், பொருளாளர் என எட்டு பேர் தேர்ந்தெடுக்கபட்டனர். அக் கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் படகுக்கு டோக்கன் வழங்குவது, படகு ஓட்டுவது, ஓட்டல் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் செப்.6ல் பணியாளர்களை மாற்றுவது சம்பந்தமாக கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் படகு போக்கு வரத்து நிறுத்தபட்டது. இப்பிரச்னை சம்பந்தமாக நேற்று முன்தினம் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யபட்டது. இது குறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. ஆனால் கிராம மக்கள் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் சமாதான கூட்டம் தோல்வி யடைந்தது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், மீண்டும் சமாதான கூட்டம் நடத்துதற்கான நடவடிக்கை எடுக்கபடும் என்றனர். 17 நாட்களுக்கு மேலாக படகு போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளதால் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத் துடன் திரும்பி செல்கின்றனர்.