உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்

தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்

முதுகுளத்துார்: -முதுகுளத்துாரில் கமுதி சாலை சங்கரபாண்டி ஊருணி செல்லும் சாலையில் தாழ்வாக செல்லும் உயர்அழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சப்படுகின்றனர்.முதுகுளத்துார் துணைமின் நிலையத்திலிருந்து பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் மின் வினியோகம் செய்யப்படுகிறது. -கமுதி சாலையிலிருந்து சங்கரபாண்டி ஊருணி செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு உயர்அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் வீடுகளுக்கு கட்டட பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்​. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மின்வாரியத்துறையினர் ஆய்வு செய்து உயர்அழுத்த மின்கம்பியை உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை