உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணியில் ஒரு மாதமாக நீடிக்கும் குறைந்த மின்னழுத்தம் மக்கள் அவதி

திருப்புல்லாணியில் ஒரு மாதமாக நீடிக்கும் குறைந்த மின்னழுத்தம் மக்கள் அவதி

திருப்புல்லாணி: திருப்புல்லாணி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குறைந்தழுத்த மின்வினியோகம் செய்யப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். திருப்புல்லாணி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 7000 மக்களுக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள நான்கு ரத வீதிகளிலும் உள்ள வீடுகள், செட்டிய தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் குறைந்தழுத்த மின் வினியோகம் செய்வதால் மின்சார உபகரணங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். எஸ்.டி.பி.ஐ., கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் கூறியதாவது:கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திருப்புல்லாணியில் குறைந்த மின் அழுத்தம் நிலவுகிறது. மின் விசிறி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரிக் உபகரண பொருட்கள் அடிக்கடி பழுதாகிவிட்டன. தற்போது கோடைகாலத்தில் மின் பற்றாக்குறை மற்றும் குறைந்தழுத்த மின்சாரத்தால் குழந்தைகளும், முதியவர்களும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே வளர்ந்து வரும் பகுதியாக விளங்கும் திருப்புல்லாணி மற்றும் புறநகர் பகுதிகளை கணக்கில் கொண்டு அதிக திறன் கொண்ட மின் டிரான்ஸ்பார்மர்களை நிறுவ மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கு புகார் மனு அளித்துள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை