உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அதிகாரிகளால் ஓரங்கட்டப்பட்ட ஓம் சக்தி நகர் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்

அதிகாரிகளால் ஓரங்கட்டப்பட்ட ஓம் சக்தி நகர் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சிக்குட்பட்ட ஓம்சக்தி நகர் பகுதியில் அடிப்படை வசதி கோரி பலமுறை புகார் அளித்தும் தற்போது வரை தீர்வு காணப்படாமல் உள்ளது. ஓம்சக்தி நகர் பொதுமக்கள் குடியிருப்போர் நல சங்க தலைவர் ராஜா தேசிங்கு, செயலாளர் கருப்பையா, துணைத் தலைவர்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம், கல்யாணசுந்தரம் ஆகியோர் கூறியதாவது: ராமநாதபுரம் நகராட்சியை ஒட்டியுள்ள பகுதியாக ஓம் சக்தி நகர் உள்ளதால் நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதில்லை. இங்கிருந்து கலெக்டர் அலுவலகம், அரண்மனை உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும். இந்த வழித்தடத்தில் மினி பஸ் இயக்கினால் இப்பகுதி மக்கள் பயனடைவர். பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ., நடந்து பாரதிநகர் மெயின் ரோட்டிற்கு செல்லவேண்டியுள்ளது. குடிநீர் வரல, ரோடு மோசம் ஓம் சக்தி நகரில் உள்ள தெருக்களில் ரோடு அமைத்து20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது ரோடு இருந்த தடமே இல்லாமல் கற்கள் நிரம்பி காணப்படுகிறது. இரவில் தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாவதால் குண்டும் குழியுமான ரோட்டில்அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபகாலமாக திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஓம்சக்தி நகரில் காவிரி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை குடிநீர் வரவில்லை. இதனால் பணம் கொடுத்துதண்ணீரை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.தெருநாய்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சுற்றித்திரிவதால் குழந்தைகளை ரோட்டில் தனியாக விடுவதற்கு பயமாக உள்ளது. இரவில் பாதுகாப்பு இல்லை ஓம்சக்தி நகரில் உள்ள ரேஷன் கடையின் முகப்பு பகுதி இரவில் மது அருந்தும் கூடமாக செயல்படுகிறது. இரவில் அந்த பகுதியில் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. இப்பகுதியில் மழைநீர் வடிகாலும், குளமும் இல்லாததால் மழைக் காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி தெருக்களில் தேங்கி காணப்படுகின்றன. துாய்மை பணிக்கு போதிய அளவில் பணியாளர்கள் இல்லாததால் வாரத்திற்கு ஒரு முறை தான் குப்பை எடுக்க வருகின்றனர்.குப்பை தொட்டி பெயரளவில் உள்ளன. அதிகாரிகள் பாராமுகம் குறைகளை பி.டி.ஓ.,விடம் புகார் தெரிவித்தால் உரிய துறைக்கு பரிந்துரைத்துள்ளதாகவும், துறையில் கேட்டால் எவ்வித உத்தரவும் வரவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஓம்சக்தி நகர் பிரச்னை குறித்து புகார் அளித்தோம். ஆனால் புகாரை நிவர்த்தி செய்யாமல் புகாருக்கு தீர்வு காணப்பட்டதாக பதில் அளித்துள்ளனர், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ