உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாவட்ட மைய நுாலகம் அருகே தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

மாவட்ட மைய நுாலகம் அருகே தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே டி-பிளாக் மாவட்ட மைய நுாலகம் அருகே கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் ரோட்டில் மாவட்ட மைய நுாலகம் அமைந்துள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி கிராமப்புறங்களை சேர்ந்த போட்டித் தேர்விற்கு தயராகும் மாணவர்கள் பலர் படிக்க வருகின்றனர். நுாலகம் நுழைவுப்பகுதியில் சாக்கடை கால்வாய் பராமரிப்பின்றி கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம், கொசுத்தொல்லையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கால்வாயை சுத்தம் செய்து கழிவுநீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ