உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு அலுவலகங்கள் முன்பு மழை நீரால் மக்கள் அவதி

அரசு அலுவலகங்கள் முன்பு மழை நீரால் மக்கள் அவதி

திருவாடானை : திருவாடானையில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு சிலநாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளி, மின்வாரிய அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் முன்பு சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நீர் தேங்கியுள்ளது. இந்த நீரை அப்புறப்படுத்தப்படாமல் பலநாட்களாக தேங்கியுள்ளதால் பல்வேறு வேலையாக செல்லும் மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மழை நீர் வழிந்தோடும் வகையில் சம்பந்தபட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி