உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை சாலையில் ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி

கீழக்கரை சாலையில் ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி

கீழக்கரை: கீழக்கரை நகராட்சி வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து கடற்கரை செல்லும் பகுதி மற்றும் சந்துகளில் வாறுகாலில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அசுத்தமான நீரை கடந்து செல்லும் பொது மக்கள், பள்ளி மாணவர்கள் முதியவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர். வாறுகாலில் ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் காரணமாக தண்ணீர் பெருகி ஓடி சாலை முழுவதும் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: வாறுகாலில் பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் அதிகமாக வரக்கூடிய உபரி நீர் வெளியேறி சாலையின் நடுவே தேங்குகிறது. இதனால் மூக்கை பிடித்த படி சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. இது போன்ற சூழ்நிலையில் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் சேகரிக்க கூடிய லாரிகள் மூலமாக கழிவு நீரை உறிஞ்சி எடுத்தால் பிரச்னைக்கு தீர்வு காணலாம். பல இடங்களில் ஏற்பட்டுள்ள வாறுகால் அடைப்பை சரி செய்ய வேண்டும். தாழ்வான பகுதியை நோக்கி செல்லும் கழிவு நீரால் அப்பகுதியில் கொசுப் பண்ணை உருவாகி பொதுமக் களுக்கு சுகாதார சீர்கேடு நிலவுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை