திருவாடானை- ஓரியூர் ரோடு சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
திருவாடானை, : திருவாடானை- ஓரியூர் சாலையில் கட்டிவயல், நகரிகாத்தான், வெள்ளையபுரம் செல்லும் வழியில் குண்டும், குழியுமாக இருந்தது. அங்கு மண்ணை கொட்டி சகதியாகியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.இது குறித்து கட்டிவயல் முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், குண்டும், குழியுமாக இருந்த இடத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினரிடம் வலியுறுத்தபட்டது. அந்த இடங்களில் கற்கள் போடாமல் மணல் போட்டுள்ளதால் சகதியாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கபட்டுள்ளனர். தார்சாலை அமைக்க வேண்டும் என்றார்.திருவாடானை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறியதாவது- மாட்டு வண்டி போட்டி நடந்ததால் அவசரத்திற்கு மணல் போடபட்டது. விரைவில் கற்கள் போட்டு தார் ஊற்றி சீரமைக்கபடும் என்றனர்.