மக்கள் திட்ட முகாம்
சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ்.கீரந்தை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற மக்கள் திட்ட முகாம் நடந்தது. முகாமில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, மேலாண்மை உள்ளிட்ட 16 துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கடலாடி தாசில்தார் முருகேஷ், கடலாடி பி.டி.ஓ., சங்கர பாண்டியன் உட்பட ஏராளமான துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.