உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊஞ்சல் சேவையில் பெருமாள்

ஊஞ்சல் சேவையில் பெருமாள்

பரமக்குடி: -பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தை கடைசி வெள்ளி ஊஞ்சல் சேவை நடந்தது.பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் சேவை நடப்பது வழக்கம். தொடர்ந்து நான்காவது வெள்ளிக்கிழமையில் மாலை 6:00 மணிக்கு பெருமாள் தயாருடன் ஊஞ்சலில் எழுந்தருளினார்.ஏகாந்த சேவையில் அருள் பாலித்த சுவாமிகளுக்கு இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பாகவதர்கள் பக்தி பாடல்களை பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை