மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை முதல் துவக்கம்
31-Jul-2025
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குவியும் மனுக்களால் அதிகாரிகள் திணறுகின்றனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. திருவாடானை தாலுகாவில் திருவாடானை, புதுப்பட்டினம், வெள்ளையபுரம், பாண்டுகுடி, தொண்டி பேரூராட்சி, கடம்பூர், பழங்குளம், துத்தாகுடி, கல்லுார், ஓரிக்கோட்டை, பி.கே.மங்கலம் ஆகிய ஊராட்சிகளில் நடந்து முடிந்துள்ளது. நேற்று முன்தினம் முகிழ்த்தகம், நம்புதாளை, திருவெற்றியூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நம்புதாளை புயல்காப்பகத்தில் நடந்தது. இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மகளிர் உதவித் தொகை கேட்டு அளிக்கப் பட்டன. முகாம்களில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் பங்கேற்று மனுக்களை கொடுக் கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் முகாம்களில் பல கோரிக்கைகளுடன் கூடிய மனுக்கள் குவிகின்றன. நேற்று முன்தினம் நம்புதாளையில் நடந்த முகாமில் கடலுக்குள் பாசி படர்ந்துள்ளது. கடலுக்குள் இறங்கவே முடிய வில்லை. கடலை சுத்தப்படுத்துங்கள் என்று ஒரு மீனவ பெண் மனு கொடுத்தார். துறை வாரியாக மனுக்கள் பெறபட்டாலும் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் மனுவை கொடுத்து வைப்போம். தீர்வு கிடைக்கிறதா இல்லையா பார்ப்போம் என்ற மனநிலையில் உள்ளனர்.
31-Jul-2025