உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நம்புதாளை டாஸ்மாக்கில் பெட்ரோல் குண்டுவீச்சு * பாட்டில் உடையாததால் கடை தப்பியது

நம்புதாளை டாஸ்மாக்கில் பெட்ரோல் குண்டுவீச்சு * பாட்டில் உடையாததால் கடை தப்பியது

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை அரசு டாஸ்மாக் மதுக்கடையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். பாட்டில் உடையாததால் ரூ.பல லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் தப்பின.நம்புதாளை உருளைக்கல்லில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு சிலர் மது வாங்க அங்கு சென்றனர். ஐந்து மதுபாட்டில்களை வாங்கியவர்கள் பணத்தை கூகுள் பே மூலம் போடுவதாக கூறினர். ஆனால் பணம் போடவில்லை. இதில் அவர்களுக்கும், ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அருகே நின்றவர்கள் இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.இந்நிலையில் அன்றிரவு 8:00 மணிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஒரு கண்ணாடி பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து டாஸ்மாக் கடை மீது வீசினர். ஆனால் தீ அணைந்து பாட்டில் உடையாமல் கடைக்கு முன் விழுந்தது. தொண்டி போலீசார் அந்த பாட்டிலை கைப்பற்றினர். பாட்டில் வெடித்திருந்தால் ரூ.பல லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் சேதமடைந்திருக்கும். இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மற்றொரு டாஸ்மாக் மூடல் :

திருவாடானை அருகே கருமொழியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று முன்தினம் மது வாங்கச் சென்ற சிலர் மூன்று மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு பணம் கூகுள் பே- வில் போடுவதாக கூறினர். ஆனால் பணம் அனுப்பவில்லை. இதில் தகராறு ஏற்பட்டு டாஸ்மாக் கடை மூடப்பட்டது. திருவாடானை போலீசார் சென்று சமரசம் செய்தபின் கடை திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை