மேலும் செய்திகள்
ஆட்டோ கவிழ்ந்து விபத்து குழந்தையுடன் பாட்டி பலி
12-Aug-2025
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகேவுள்ள வழுதுாரில் தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய அமைப்பாளர் கவுதம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வழுதுாரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஜூலை 5 முளைப்பாரி திருவிழா நடந்தது. அப்போது கவுதமிற்கும் அப்பகுதியைச் சேர்ந்த பிரபுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பிரபு 32, அலெக்ஸ் 36, உள்ளிட்ட 5 பேர் கவுதம் வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசி எரிந்துள்ளனர். இதில் வீட்டின் முன்பகுதி முழுவதும் தீப்பற்றியது. அங்குள்ள சோபா, சேர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கேணிக்கரை போலீசார் பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேடி வந்தனர். இதில் தொடர்புடைய மண்டபம் கேம்ப் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் மகன் விக்னேஷ், 22, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
12-Aug-2025