உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம்...  கிடப்பில்:  ராமநாதபுரத்தில்  கட்டடம் தேடும் அவலம்

புதிய அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம்...  கிடப்பில்:  ராமநாதபுரத்தில்  கட்டடம் தேடும் அவலம்

ராமநாதபுரம்: . ராமநாதபுரம் கேணிக்கரை ரோட்டில் முன்னாள் ராணுவத்தினர் பவன் கட்டடத்தில் முதல்தளத்தில் 2008 முதல் அரசு அருங்காட்சியகம் உள்ளது. அருங்காட்சியகத்தில் 65 கற்சிலைகள், பழமையான மரத்திலான சிற்பங்கள், ஓவியங்கள், அரியவகை நாணயங்கள், ஓலைச்சுவடிகள் என நுாற்றுக்கணக்கான பழங்கால பொருட்கள் உள்ளன. இந்த கட்டடம் 1990ல் கட்டப்பட்டு போதிய பராமரிப்பு இல்லாமல் தற்போது கூரை சிமெண்ட் பூச்சிகள் இடிந்து கீழேவிழுகிறது. பலஇடங்களில் கட்டடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. . பலத்த மழைபெய்தால் பெரியஅளவில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனையடுத்து அருங்காட்சியகத்தை பார்வையிட மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் மட்டும் வந்துசெல்கின்றர். 2022ல் புதிய அரசு அருங்காட்சியகம் ரூ.5கோடியில் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக மண்டபத்தில் 5 ஏக்கரில் இடம் தேர்வு செய்துள்ளனர். ஆனால் இதுவரை பணிகள் துவங்கவில்லை. இந்நிலையில் மண்டபத்தில் அழகன் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு ரூ.21 கோடியில் நாவாய் (மரக்களம்) அருங்காட்சியம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்துடன் ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்திற்கு கட்டடம் அமைக்கும் பணியை இணைத்துள்ளதால் மேலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள கட்டடம் மிகவும் சேதமடைந்துள்ளதால் வேறு அரசு கட்டடம் அல்லது வாடகைக்கு இடம் தேடி வருகின்றனர். பழங்காலப் பொருட்களின் பாதுகாப்பு, அலுவலர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மழைக்காலத்திற்குள் வேறு இடத்திற்கு தற்போதைய அருங்காட்சியக பொருட்களை மாற்றிட வேண்டும். புதிய அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை