மேலும் செய்திகள்
சாயல்குடியில் 2000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
06-Nov-2025
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர். தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் சாலையின் இருபுறமும் 2 கி.மீ., வரை ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் இணைந்து நேற்று ஆயிரம் பனை விதைகளை குழி தோண்டி விதைத்தனர். பின் மாணவர்களிம் இயற்கை வளம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ் விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ்., ஆசிரியர் செல்வகுமார், ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர் தினகரன், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
06-Nov-2025