மேலும் செய்திகள்
விதிமீறிய மீன் பிடிப்பால் அழியும் பவளப் பாறைகள்
11-Sep-2025
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் அமிர்தா விஷ்வ வித்யா பீடம் சார்பில் கடலில் புற்கள் நட்டனர். ராமேஸ்வரம் கடல் பகுதியில் தடையை மீறி இரட்டை மடி, சுருக்கு மடியில் மீன் பிடிப்பதாலும், பருவநிலை மாறுபாட்டால் கடலில் வளரும் புற்கள் அழிந்து கரை ஒதுங்குகிறது. இதனால் மீன்வளம் உற்பத்தி பாதிக்கிறது. இதனை தடுக்கும் வகையில் அமிர்தா விஸ்வவித்யா பீடம் மற்றும் பாலின சமத்துவ மையம் கடல்சார் விவசாயக் குழு சார்பில் நேற்று ராமேஸ் வரம் ஓலைகுடா கடற்கரையில் கடல் புற்கள் நட்டு வைத்தனர். செப்., 12 முதல் நேற்று வரை தொண்டி, சோழியாக்குடி, ஓலைகுடா கடற்கரையில் கடல் புற்கள் நட்டனர். இதில் ஏராளமான தன்னார்வலர்கள், மீனவப் பெண்கள் பங்கேற்ற னர்.
11-Sep-2025