உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிளம்ஸ்  விலை சரிவு: கிலோ ரூ.200

பிளம்ஸ்  விலை சரிவு: கிலோ ரூ.200

ராமநாதபுரம்: வெளியூர்களில் இருந்து ராமநாதபுரத்திற்கு பிளம்ஸ் பழங்கள் வரத்து அதிகரித்துஉள்ளதால் கடந்த மாதம் கிலோ ரூ.300 வரை விற்றது தற்போது விலை சரிவடைந்து கிலோ ரூ.200க்கு விற்கிறது. சீசனை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிளம்ஸ் பழங்கள் அதிகளவில விற்பனைக்கு வருகிறது. தற்போது சீசனை முன்னிட்டு மதுரை, புதுக்கோட்டை, கொடைரோடு உள்ளிட்ட இடங்களில் இருந்து ராமநாதபுரம் வியாபாரிகள் பிளம்ஸ் பழங்களை கொள்முதல் செய்து சந்தையில் விற்கின்றனர். வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த மாதம் கிலோ ரூ.300 வரை விற்ற பிளம்ஸ் பழம் தற்போது கிலோ ரூ.200க்கு விற்கிறது. விலை சரிவால் மக்கள் அதிகளவில் வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை