உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சிறுமிகளை சில்மிஷம் செய்தவர் மீது போக்சோ 

 சிறுமிகளை சில்மிஷம் செய்தவர் மீது போக்சோ 

திருவாடானை: தொண்டி அப்துல்மஜீத் 57. இவருடைய மருமகள் அந்த வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். அப்பகுதியை சேர்ந்த 9, 7 வயதுள்ள சகோதரிகளான இரு சிறுமிகள் டியூசன் படித்தனர். மருமகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அப்துல்மஜித் சிறுமிகளை சில்மிஷம் செய்தார். இச்சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது. சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்ய முடிவு செய்தனர். இதை அறிந்த அப்துல்மஜித் சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்று விட்டார். புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் அப்துல்மஜீத் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி