உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாதயாத்திரை பக்தர்கள் ரோட்டோரத்தில் நடந்து செல்ல போலீசார் அட்வைஸ்

பாதயாத்திரை பக்தர்கள் ரோட்டோரத்தில் நடந்து செல்ல போலீசார் அட்வைஸ்

திருவாடானை: பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ரோட்டோரத்தில் அமைதியாக நடந்து செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இங்கு ஆடி கடைசி வெள்ளி அன்று ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வார்கள். இந்த ஆண்டு ஆக.15ல் கடைசி வெள்ளி அன்று விழா நடைபெற உள்ளது. இது குறித்து போலீசார் கூறியதாவது- பக்தர்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் ரோடு ஓரத்தில் அமைதியாக நடந்து செல்ல வேண்டும். சில நாட்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் உப்பூர் அருகே இரவில் பாதயாத்திரை சென்ற பெண்கள் மீது வாகனம் மோதி இரு பெண்கள் இறந்தனர். எனவே பாதயாத்திரை பக்தர்கள் விபத்தை தடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதுபோல் வாகன ஓட்டுநர்கள் வேகமாக செல்லக்கூடாது. போக்குவரத்து விதிமுறை மீறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி