உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உத்தரகோசமங்கை கும்பாபிேஷக நிகழ்ச்சியில் தேவையான முன்னேற்பாடு செய்யாத போலீசார்

உத்தரகோசமங்கை கும்பாபிேஷக நிகழ்ச்சியில் தேவையான முன்னேற்பாடு செய்யாத போலீசார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கையில் மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிேஷக விழாவில் போலீசார் முறையான முன்னேற்பாடுகள் செய்யாததால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.உத்தரகோசமங்கையில் நடந்த கும்பாபிேஷகத்திற்கு போலீசார் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வாகனங்களை அனுமதித்ததால் அனைத்து ரோடுகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்கு வரத்து நெரிசலால் வாகனங்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.லட்சம் பக்தர்கள் கோயிலை சுற்றிலும் நின்றுகொண்டிருந்தனர். வாகனங்கள் செல்ல முடியாததால் பக்தர்களும் வெளியேற முடியாமல் உத்தரகோசமங்கை பகுதியில் நெருக்கடியில் தவித்தனர். வெப்பம் அதிகளவு இருந்ததால் முதியவர்கள், குழந்தைகள் அவதிப்பட்டனர்.உத்தரகோசமங்கைக்கு ராமநாதபுரத்தில் இருந்து புத்தேந்தல், எக்ககுடி வழியாக ஒரு பாதையும், உத்தரகோசமங்கையில் இருந்து திருப்புல்லாணிக்கு செல்லும் சாலையும், உத்தரகோசமங்கையில் இருந்து சிக்கல், முதுகுளத்துார் செல்லும் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போலீசார் இதில் ஒருவழிப்பாதையாக பக்தர்களை அனுமதித்திருந்தால் எளிதாக வாகனங்கள் சென்றிருக்க முடியும். பஸ்களை கோயில் வரை அனுமதிக்காமல் தற்காலிக பஸ் ஸ்டாண்டுகளை கோயிலுக்கு வெளியில் அமைத்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு பயணிகள், பக்தர்கள் எளிதில் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்திருக்க முடியும்.காலை 9:00 மணிக்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மதியம் 2:00 மணி வரை நீடித்தது. பக்தர்கள் 5:00 மணி நேரமாக கடுமையான கோடை வெயில் கொளுத்திய போதும் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். போக்குவரத்து நெரிசல் குறித்து போக்குவரத்து போலீசாரோ, அரசு போக்குவரத்துக்கழகத்தினரோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.

போதுமான பஸ்கள் இயக்காததால் அவதி

ராமநாதபுரம்: பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் ஸ்டாண்டில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். உத்தரகோசமங்கை சிறப்பு பஸ்களில் அளவுக்கு அதிகமான பயணிகள் இருந்ததால் பஸ்களில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். சிறப்பு பஸ்கள் சென்றாலும் உத்தரகோசமங்கையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் திரும்பி பஸ்கள் வராததால் பயணிகள் கோயிலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

கூடுதல் வாடகை வசூல்

உத்தரகோசமங்கையில் லாட்ஜ், யாத்ரீகர்கள் தங்கும் விடுதிகள் இல்லை. 1995ல் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை சேதமடைந்துள்ளது. இதனை பயன்படுத்தி உத்தரகோசமங்கையில் சிலர் அதிக தொகைக்கு வீடுகளை வாடகைக்கு விட்டனர்.வெளியூர் பக்தர்கள் கூறியதாவது: பத்து நாட்களுக்கு முன்பாகவே வீடுகளை வாடகைக்கு எடுத்து தினமும் சுவாமி தரிசனம் செய்வதற்காகவும், இதர சேவைகளை செய்து வரவும் இங்கு தங்கி உள்ளோம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீடுகளை பிடித்துள்ள பக்தர்களிடம் ஒரு நாளைக்கு ரூ.4000 முதல் 5000 வரை வாடகை வசூலிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் நகராக உள்ள உத்தரகோசமங்கைக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத் துறையினர் சார்பில் பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகளை கட்ட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை