மேலும் செய்திகள்
கார் கவிழ்ந்து இருவர் பலி
25-Aug-2025
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்கு காத்திருந்த போலீஸ் ஏட்டு முருகானந்தம் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியதில் பலியானார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காந்தி நகரை சேர்ந்தவர் முருகானந்தம் 48. இவர் ராமநாதபுரம் ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். மூன்று மாதமாக மருத்துவ விடுப்பில் இருந்தவர் தனது மாமியார் ஊருக்கு சென்று விட்டு ஊர் திரும்புவதற்காக நேற்று அதிகாலை ஆர். எஸ்.மங்கலம் உப்பூர் அருகே ஏ.மணக்குடி பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார். ரோட்டோரமாக நின்று கொண்டிருந்த முருகானந்தம் மீது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முருகானந்தம் இறந்தார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Aug-2025