உள்ளூர் செய்திகள்

பொங்கல் உற்ஸவம்

பெருநாழி: பெருநாழி அருகே பொந்தம்புளி கிராமத்தில் உள்ள வாழ வந்தாள் அம்மன் கோயிலில் ஆடி பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. முன்னதாக சித்தி விநாயகர், வாழ வந்தாள் அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவில் 108 விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் நடன நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பொந்தம்புளி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை