உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொங்கல் பரிசு தொகுப்பு புகார் கூற கட்டணமில்லா தொலைபேசி

பொங்கல் பரிசு தொகுப்பு புகார் கூற கட்டணமில்லா தொலைபேசி

ராமநாதபுரம் : ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கம் ரூ.1000, பொருட்கள் வினியோகம் குறித்தப் புகார்களை 1967, 1800-425-5901 ஆகிய கட்டணமில்லா தொலை எண்களில் தெரிவிக்கலாம்.தமிழக அரசு பொங்கல் பரிசாக ரேஷன்கடைகளில் ரூ.1000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்குரிய டோக்கன் நேற்று (ஜன.7-9) முதல் நாளை வரை வழங்கப்படும். ரொக்கம், பொருட்க் ஜன.10 முதல் 14 வரை சுழற்சிமுறையில் வழங்கப்படும். இதற்காக ஜன.12 வெள்ளியன்றும் ரேஷன்கடைகள் செயல்படும். ஏதேனும் குறை, புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும், மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077- தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை