உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொங்கல் தொகுப்பு கிடைக்குமா 23,186 பேர் எதிர்பார்த்து காத்திருப்பு

பொங்கல் தொகுப்பு கிடைக்குமா 23,186 பேர் எதிர்பார்த்து காத்திருப்பு

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு பெற முடியாமல் விடுபட்ட 23,186 பேர் பொங்கல் தொகுப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். பொங்கலை முன்னிட்டு அரிசி கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய தொகுப்பை அரசு வழங்கியது. பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கபட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 லட்சத்து 79 பேர் பொங்கல் தொகுப்பு பெற தகுதியானவர்களாக இருந்தனர்.ரேஷன் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கினர். பொதுமக்கள் நீண்ட கியூவில் நின்று பொங்கல் தொகுப்பை பெற்றனர். இதில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 893 பேருக்கு வழங்கபட்டது. மீதமுள்ள 23 ஆயிரத்து 186 பேர் வாங்கவில்லை.பொங்கல் தொகுப்பு வழங்கும் போது வெளியூர்களில் இருந்தவர்கள், பயோ மெட்ரிக்கில் கைரேகை பதிவாகதவர்கள் இதனை வாங்க முடியாமல் போனது. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு பெறாதவர்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பாக அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை.பொங்கல் தொகுப்பு பெறாதவர்களுக்கு தற்போது மீண்டும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள தொகுப்பை ரேஷன் கடைகாரர்கள் கூட்டுறவு சங்கங்களில் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை