| ADDED : பிப் 01, 2024 07:10 AM
ராமநாதபுரம : -ராமநாதபுரத்தில் நல வாரிய தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழாவில் தமிழ்நாடு கட்டுமான வாரிய தலைவர் பொன்குமார் பேசுகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை மிகவும் குறைவு என அதிருப்தி தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தொழிற்சங்க பிரமுகர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்நேற்று நடந்தது. அதில் பேசிய பொன்குமார் பேசியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் நல வாரியங்களில் 62 ஆயிரம் பேர்பதிவு செய்துள்ளனர். கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 26 ஆயிரம் பேர் மட்டுமேபதிவு செய்துள்ளனர். இது மிகக் குறைந்த அளவு தான். அதிக உறுப்பினர்களை சேர்க்க தொழிற்சங்க பிரமுகர்கள், தொழிலாளர்கள், துறைஅலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள்நல வாரியத்தில் சேர்வதற்கு வி.ஏ.ஓ., மூலம் ஒப்புதல் வழங்கப்படும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தி அரசு கொள்கை முடிவாக எளிதில் சேர்வதற்கும், நலத்திட்ட உதவிகளை எளிதில் பெற அடுத்த மாதம் புதியஅரசாணைகள் வெளியிடப்படவுள்ளது என்றார். தொழிற்சங்க பிரமுகர்களிடம்குறைகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 10 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பொன்குமார் வழங்கினார்.தொழிலாளர்நலத்துறை உதவி கமிஷனர் குலசேகரன், பனை தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் கலாவதி, தொழிலாளர் நலத்துறை அலுவலக கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.