உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாட்டுக்கோழிகள் நோய் தாக்கி இறப்பு: விவசாயிகள் கவலை

நாட்டுக்கோழிகள் நோய் தாக்கி இறப்பு: விவசாயிகள் கவலை

திருவாடானை: திருவாடானை பகுதியில் வளர்க்கபடும் நாட்டுக்கோழிகளுக்கு நோய் தாக்கி இறப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.திருவாடானை தாலுகாவில் விவசாயத்தை சார்ந்தவர்கள் நாட்டுக்கோழி வளர்த்து வருவாய் ஈட்டுகின்றனர். பொதுமக்கள் விரும்பி வாங்குவதால் ஆட்டு இறைச்சிக்கு இணையாக நாட்டுக்கோழி கிலோ ரூ.400 விற்கிறது. தற்போது கடும் குளிராக உள்ளது. பருவநிலை மாற்றத்தால் நாட்டுக்கோழிகளுக்கு கழிச்சல் நோய், காய்ச்சல், சுவாச நோய் தாக்கி வருகிறது. இதனால் கோழிகள் இறப்பால் மக்கள் கவலையடைந்துள்ளனர். திருவாடானை மேலரதவீதி மற்றும் கிராமங்களில் வளர்க்கபடும் நாட்டுக்கோழிகள் கடந்த சில நாட்களாக நோய் தாக்கி இறந்துள்ளன. மற்ற கோழிகளுக்கும் நோய் பரவுவதால் உயிருடன் இருக்கும் கோழிகளை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது- பருவநிலை மாற்றத்தால் கோழிகளுக்கு நோய்கள் தாக்குகின்றன. கால்நடை மருந்தகத்தில் நாட்டுக்கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை