உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாத்துக்குடி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு: கிலோ ரூ.40

சாத்துக்குடி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு: கிலோ ரூ.40

ராமநாதபுரம்; ராமாதபுரத்திற்கு வெளியூர்களில் இருந்து சாத்துக்குடி பழங்கள் வரத்து அதிகரித்துஉள்ளதால் விலை குறைந்து கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது. ஆந்திரா மாநிலம் அனந்தபூர், கடப்பா, நெல்லுார் உள்ளிட்ட இடங்களில் இருந்து சாத்துக்குடி வரத்து அதிகரித்துள்ளது. மதுரைக்கு வரும் சாத்துக்குடியை மொத்தமாக வாங்கி வந்து ராமநாதபுரத்தில் வியாபாரிகள் விற்கின்றனர். தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த மாதம் கிலோ ரூ.50க்கு விற்ற சாத்துக்குடி கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது. வெயிலின் தாக்கம்அதிகரித்து வருவதால் சாத்துக்குடி ஜூஸ் தயாரிக்க மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை