உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடி, பாம்பனில் பிரதமர் அலுவலக அதிகாரி ஆய்வு

தனுஷ்கோடி, பாம்பனில் பிரதமர் அலுவலக அதிகாரி ஆய்வு

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, பாம்பனில் மீனவர்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து பிரதமர் அலுவலக இணை இயக்குனர் ரவி ஆய்வு செய்தார்.இலங்கை கடற்படை தாக்குதலால் 90 சதவீதம்பாதிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மாற்று பகுதியில் மீன் பிடிக்கவும், மீனவர்களுக்கான வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு நிதியுடன் தமிழக அரசு நிறைவேற்றியது குறித்தும் ஆய்வு செய்ய பிரதமர் அலுவலக இணை இயக்குனர் ரவி நேற்று ராமேஸ்வரம் வந்தார்.தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மீன்கள் இறக்கும் மற்றும் படகுகள் நிறுத்தும் பாலத்தை ரவி பார்வையிட்டார். பின் பாம்பன் குந்துகால், தங்கச்சிமடத்தில் புதிதாக அமையவுள்ள துாண்டில் வளைவு பால திட்ட பணிகள் குறித்தும்,மீனவர்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து மீன்வளத்துறை துணை இயக்குனர் கோபிநாத், மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையும் அவர் நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி