உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை அவலத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை அவலத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை, சேவை குறைபாடு அவலத்தை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் 80 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் மருத்துவ தேவைக்கு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை, சேவை குறைபாடுகளால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். சாதாரண சிகிச்சைக்கு கூட நோயாளிகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனை கண்டித்து இந்திய கம்யூ., கட்சியின் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதர் சங்க நகர் செயலாளர் லட்சுமி, மாவட்ட செயலாளர் வடகொரியா, நகர் தலைவர் பூமாரி, இந்திய கம்யூ., ராமேஸ்வரம் நகர் செயலாளர் செந்தில்வேல், நிர்வாகி முருகானந்தம், ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை