உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கச்சத்தீவு விழாவுக்கு பைபர் படகில் செல்ல அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

கச்சத்தீவு விழாவுக்கு பைபர் படகில் செல்ல அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்; கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவுக்கு பைபர் கிளாஸ் படகில் செல்ல அனுமதி வழங்கக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மார்ச் 14, 15ல் கச்சத்தீவு சர்ச் திருவிழா நடக்க உள்ளது. இதில் விசைப்படகில் பக்தர்கள் செல்ல தமிழக அரசு அனுமதித்துஉள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி விழாவுக்கு இன்ஜின்பொருத்திய பைபர் கிளாஸ் படகில் செல்ல அனுமதி வழங்கக் கோரி நேற்று ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகம் முன்பு வழக்கறிஞர் பிரின்சோ ரெய்மண்ட் தலைமையில் பாரம்பரிய மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில் ஓலைக்குடா மீனவர் கிராம செயலாளர் லாரன்ஸ், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் சகாயராஜ் உள்ளிட்ட மீனவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை