உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பனில் புதிய ரயில் பாலத்தை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பாம்பனில் புதிய ரயில் பாலத்தை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.பாம்பன் கடலில் ரூ.530 கோடியில் அமைத்த புதிய ரயில் பாலத்தில் சில குறைகள் உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சுட்டிக்காட்டினார். இதனால் பாலம் திறப்பு விழா தள்ளிப்போனது. தற்போது புதிய பாலத்தில் குறைகளை சரி செய்து 100 சதவீதம் வலுவாக உள்ளது என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.இருப்பினும் புதிய பாலம் திறக்கப்படாததால் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்தின்றி வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறக்கவும், ஏற்கனவே ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்பட்ட பாலக்காடு ரயிலை இயக்கவும், பகல் நேர சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் முன்பு அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம்சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ராமேஸ்வரம் நகர் இந்திய கம்யூ., செயலாளர் செந்தில், இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் கருப்பையா, விஜய்பிரசாத், சங்கீதா, தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை