பசும்பொன்னில் 316 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 117 வது ஜெயந்தி, 62-வது குருபூஜை விழாவை முன்னிட்டு கலையரங்கத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கோவிந்தராஜலு வரவேற்றார். கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டை, வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் 316 பேருக்கு ரூ.52.80 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் நன்றி கூறினார். கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி உட்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.