புல்லக்கடம்பன் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி
தொண்டி; தொண்டி அருகே புல்லக்கடம்பன் ஊராட்சி அரசப்பன்குடியிருப்பு, பூந்தோட்டம், மருங்கூர், தீர்த்தாண்டதானம், பத்ரன்வயல் போன்ற கிராமங்களில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை இல்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை இல்லை. கோடைகாலம் என்பதால் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதியாக உள்ளது. கிணறுகள் வறண்டு விட்டதால் வீட்டு உபயோகத்திற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் அவதியாக உள்ளது. டிராக்டர்களில் விற்பனை செய்யப்படும் பாதுகாப்பற்ற நீரை ஒரு குடம் ரூ.15 க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். எனவே குடிநீர் சப்ளை முறையாக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.