உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரேஷன் பொருட்களை கடத்தினால் தண்டனை கலெக்டர் எச்சரிக்கை

ரேஷன் பொருட்களை கடத்தினால் தண்டனை கலெக்டர் எச்சரிக்கை

ராமநாதபுரம்: மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை கடத்தினால் அத்தியாவசிய பொருட்கள் சட்டப்படி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் எச்சரித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தொடர்புடைய பொது விநியோகத் திட்ட பொருட்களை கடத்துதல் மற்றும் பதுக்குதல் சட்டப்படி குற்றம். ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 பிரிவு 7 (1) (ஏ) (ii)- ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும். பொருட்களை கடத்துவதற்கு பயன்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்குதல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி 1800 599 5990 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை