உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழையால் கரிமூட்டம் தொழில் பாதிப்பு

மழையால் கரிமூட்டம் தொழில் பாதிப்பு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகாவில் பெய்து வரும் மழையால் கரிமூட்டம் தொழில் பாதிப்படைந்துள்ளது.முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக நெல் விவசாயம் செய்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு தொடர் மழை, வறட்சியால் கண்மாய்களுக்கு தண்ணீர் வராமல் இருப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வந்தது.இதையடுத்து ஒருசில கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களை விற்பனை செய்து வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றனர். ஒரு சிலர் சீமைக்கருவேல் மரங்களை வெட்டி கரிமூட்டம் தொழில் செய்கின்றனர். இதில் ஓரளவு லாபம் கிடைப்பதால் தொடர்ந்து செய்கின்றனர். முதுகுளத்துார் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை நன்கு பெய்கிறது. இதனால் முதுகுளத்துார் பகுதியில் கரிமூட்டம் தொழில் செய்து வந்த நிலையில் மழையால் தண்ணீர் தேங்கி வீணாகியது. ஒருசில இடங்களில் மழையால் ஈரப்பதம் ஏற்பட்டு கரிகள் வீணாகியதால் நஷ்டம் ஏற்பட்டது. முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளத்தில் கரிமூட்டத்தில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டர் வைத்து வெளியேற்றினர். தற்போது பெய்த மழையால் கரிமூட்டம் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை