உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழையால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு நீர்வரத்து

மழையால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு நீர்வரத்து

ஆர்.எஸ்.மங்கலம்: மழை பெய்துவருவதால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் 2 அடி நீர் தேங்கியுள்ள நிலையில், விவசாயிகள் விவசாய பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்ற, ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் உள்ள 20 பாசன மடைகள் மூலம், 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. பெரிய கண்மாயில் முழு கொள்ளவாக 1205 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கப்படுகிறது. 6.5 அடி உயரம் கொண்ட இந்த கண்மாயில், கடந்த சில வாரங்களாக பெய்த மழைக்கு தற்போது கண்மாயில் இரண்டு அடி நீர் வரை தேங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். பரவலாக பெரிய கண்மாயின் கீழ், பாசன நிலங்களில் நெல் பயிர்கள் முளைத்துள்ளதால், களைக்கொல்லி மருந்து தெளித்தல், வாய்க்கால் சீரமைப்பு, வயல் வரப்பு சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். சில கிராம பகுதிகளில், கூலி ஆட்கள் மூலம் நெல் பயிருக்கு இடையூறாக உள்ள களைகளை பறிக்கும் பணியிலும் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை